பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

பிப்ரவரி மாத ராசி பலன்கள் 2024 - மிதுனம்

வெற்றி பாதையில் விரைந்து செயல்பட துடிக்கும் மிதுன ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குரு அமர்ந்தும் ராசிநாதன் பார்வை ராசிக்கு அமைவதும். உங்களின் தொழிலிலும், பணியிலும் வளம் பெறுவீர்கள். சிலருக்கு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் அமையும். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களையும் சிறப்பாகவும், விரைவாகவும் செய்து முடிப்பீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களின் வாழ்க்கைக்கு வெற்றியைத் தேடித் தரும். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் ஈடுபாடுகள் நல்ல பலனைத் தரும். லாபாதிபதியின் பார்வையால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணபலன்கள் எளிதில் கிடைக்கப் பெறுவீர்கள். சகோதரரின் மூலம் சிலருக்கு ஆதாயம் கிடைக்கப் பெறுவீர்கள். வேலை தேடுபவருக்கு நல்ல வேலை விரைவில் அமையும். பொருளாதாரம் சிறக்கும்.
 
சந்திராஷ்டம நாட்கள்:
 
08-02-2024 வியாழன் காலை 08.43 முதல் 10-02-2024 சனி பகல் 01.42 மணி வரை.

நட்சத்திர பலன்கள்:-

மிருகசீரிடம் 3, 4 ஆம் பாதங்கள்:
 
நினைத்ததை சாதித்து காட்டுவீர்கள். எதிலும் செயல் திறனுடன் செயல்பட்டு நன்மை அடைவீர்கள். மூத்த சகோதரின் வழியில் நன்மை உண்டாகும்.
 
திருவாதிரை 1, 2, 3, 4 ஆம் பாதங்கள்:
 
புதிய தொழில் வாய்ப்புகளும், வெளிநாட்டு உதவிகளும் நன்மையைத் தரும். கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பணபுழக்கம் இருக்கும்.

புனர்பூசம் 1, 2, 3 ஆம் பாதங்கள்:
 
காலத்தை அறிந்து செயல்படுவீர்கள். அரசாங்க வேலைக்கு முயற்சி செய்தவருக்கு வேலை கிடைக்கும். உடல் நலனில் முன்னேற்றம் உண்டாகும்.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
மஞ்சள், பச்சை, ஓரஞ்சு.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
மேற்கு, தென்மேற்கு, தெற்கு.
 
அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், வெள்ளி.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
வியாழக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, பச்சை நிற பட்டாடை உடுத்தி நெய் தீபமிட்டு வணங்கி வர சகல காரியமும் அனுகூலமாகும்.